திருச்சி சுப்பிரமணியபுரம் பொன்மலைப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள தோல் மற்றும் அழகியல் சிகிச்சைக்கான டாக்டர் பிருந்தா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தோல் மற்றும் அழகிய சிகிச்சைக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் பொது தோல் நோய்கள், ஒவ்வாமை தோல் நோய்கள் முடி உதிர்தல் பிரச்சனை முகப்பருவடு மரு மச்சம் நீக்குதல்,
முகப்பொலிவிற்கான சிகிச்சை நகம் சம்பந்தமான சிகிச்சை சொரியாசிஸ் வெண்புள்ளி ஆணிக்கால் சிரங்கு படர்தாமரை வழுக்கை இளநரை ஆகியவற்றிற்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவமனையின் டாக்டர் பிருந்தா தங்கராஜ் மருத்துவ ஆலோசனை வழங்கி சிகிச்சை அளித்தார்.
தோல் மற்றும் அழகிய சிகிச்சைக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாமில் திருச்சி மாவட்டத்திலிருந்து ஏராளமான தோல் சம்பந்தப்பட்ட பாதிப்பு உள்ளவர்கள் டாக்டர் பிருந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருந்தனர் .