டாக்டர் அம்பேத்காரின் 133- வது பிறந்த நாளை முன்னிட்டு பங்க்ஷன் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அருகில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயுருமான ஜெ. சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதேபோல் டாக்டர் அம்பேத்கார் திரு உருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கருப்பு முருகானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அருகில் பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர் அதனைத் தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.