திருச்சி மாவட்டம் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 27வது ஆண்டு விழா கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து விழா தலைமை உரையாற்றி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.
எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். நவீன் சேட் கல்லூரியின் சாதனைகளை எடுத்துரைத்தார். மேலும் அனைத்து துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளை எடுத்துக்காட்டும் கல்லூரியின் வருடாந்திர அறிக்கை, காணொளி வாயிலாக திரையிடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் விஜய் டிவி புகழ் KPY.பாலா மற்றும் அவரது சிறப்பு குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.