திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராசர் அவர்களின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் 119 ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தலா ரூபாய்1,500 நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையான 1,500 ரூபாய் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்ரீக் ராஜ்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ப்ராக்ரஸ் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு மாநில துணைத் தலைவருமான பெஞ்சமின் இளங்கோவன் மற்றும் ஆதிபகவன் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு மாநில துணைச் செயலாளருமான கீர்த்தனா ஆகியோர் இணைந்து இந்த விழாவினை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து எம்பி திருநாவுக்கரசர் பேசுகையில். காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 119 மாணவ மாணவிகளுக்கு தலா 1,500 ரூபாய் இங்கு வழங்கப்படுகிறது பணம் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் கிடையாது, பணத்தை ஏழை மக்களுக்கு கொடுக்கும் மனம் உள்ளவர்கள் தான் நல்ல மனிதர்கள். சிலர் கடன் வாங்கியாவது பிறருக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவர் அத்தகை மனசு அனைவருக்கும் அமையாது. 45 ஆண்டு காலமாக பல்வேறு பதவிகளில் இருந்து உள்ளேன் ஆனால் இந்த முறை எம்பி ஆனதில் இரண்டு விஷயங்களில் எனக்கு முயற்சி இல்லை மக்கள் எனக்கு அதிக அளவில் வாக்களித்து நம்பிக்கையுடன் வெற்றி பெற செய்தார்கள். ஆனால் கொரானா தாக்குதல் காரணமாக மக்களை நேரில் சென்று சந்திக்க முடியவில்லை அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் எம்பி களுக்கான ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி நிதியை பிரதமர் மோடி கொரானா காரணம் காட்டி பறித்துக் கொண்டார். இந்த நிதி கிடைத்தால் சிறிய சாலைகள், பாலங்கள், ரேஷன் கடைகள் போன்றவற்றைக் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய முடிந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி இந்த நிதியை நிறுத்திவிட்டதுதான் பெரிய கஷ்டம் ஏற்பட்டுவிட்டது. ஒரு புறம் கொரானா கஷ்டத்தை ஏற்படுத்தியது, மோடி ஒரு புறம் கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார். இதன் காரணமாக திருப்தி இல்லாத நிலையில் உள்ளேன் என்று வருத்தத்துடன் கூறினார்.

மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிக்க முடியாமல் ஆன்லைன் மூலமாக படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் செல்போன்கள் உபயோகப்படுத்தும் சூழ்நிலை உருவானது, மாணவர்கள் கெட்டுப் போவதற்கு காரணமான வழிகளில் செல்போனும் ஒன்று அதனால் ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடன் குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதே பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாநில பொதுச் செயலாளர்

வக்கீல் சரவணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் பெனிட், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.