இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்துதலின் மூன்றாம் கட்ட நடவடிக்கையாக மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இதற்கான பதிவுகள் http://cowin.gov.in, ஆரோக்ய சேது மற்றும் UMANG செயலி மூலம் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தருணத்தை பயன்படுத்தி இணைய வழி குற்றவாளிகள் பயனாளிகளின் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை சேகரிக்க முயற்சித்துவருவது கண்டறியப்பட்டுள்ளது.

இணைய வழி குற்றவாளிகளின் தந்திரங்கள்:• இணைய வழி குற்றவாளிகள் உங்களை ஏமாற்ற தடுப்பூசி பதிவுக்காக அழைப்பதாக கூறி உங்களுடைய ஆதார் எண்¸ வங்கி கணக்கு எண் மற்றும் கிரெடிட் / டெபிட் கார்டு விவரங்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர்.• தடுப்பூசி பதிவு செய்வதற்கு OTP தேவைபடுவதாக கூறி உங்களுக்கு வந்த OTP-யை கேட்டு ஏமாற்றலாம்.• சில இணைய குற்றவாளிகள் ரெம்டெசிவர் மருந்துகளை குறைந்த விலையில் விற்பதாக கூறியும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.பரிந்துரைக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:• கோவிட் 19 தடுப்பூசி பதிவானது http://cowin.gov.in, ஆரோக்ய சேது மற்றும் UMANG செயலி மூலமாக மட்டுமே செய்யப்பட வேண்டும்.• தடுப்பூசி பதிவுக்காக யாரும் தொலைப்பேசி வாயிலாக உங்களது விவரங்களை கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.• http://cowin.gov.in, ஆரோக்ய சேது மற்றும் UMANG செயலியை தவிர கோவிட் 19 தடுப்பூசி வழங்குவதாக கூறும் எந்தவொரு வலைத்தளம் / செயலிகளுக்கும் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்.• தடுப்பூசி பதிவுக்காக உங்களது வங்கி சார்ந்த விவரங்களையோ அல்லது தனிப்பட்ட விவரங்களையோ யாருடனும் ஆன்லைனிலோ அல்லது தொலைபேசிலோ பகிர வேண்டாம்.• தடுப்பூசி பதிவுக்காக என கூறி உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு யாரேனும் உங்களைத் தொடர்பு கொண்டால் https://cybercrime.gov.in/ என்ற வலைதளத்தில் புகார் அளிக்கவும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.