திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரே ஸ்ரீ தாயார் ஹோம் கேர் சர்வீஸ் என்ற பெயரில், வீடுகளுக்கு நர்சுகள் அனுப்பி வைக்கும் நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் வயது 45 இவர்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவை கண்காணிக்க 236 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது – கமிஷனர் காமினி தகவல்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது..இந்த திருவிழாவானது (13.12.2023) முதல் (22.12.2023) வரை பத்து திருவிழாவாகவும், (23.12.2023) ஆம் தேதி முதல் (02.01.2024) ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. (23.12.2023) ஆம்…

ஶ்ரீரங்கம் அபாகஸ் அகாடமி சார்பாக அபாகஸ் மையங்களுக்கு இடையேயான போட்டி – 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

திருச்சி ஶ்ரீரங்கம் மேற்கு வீரேஷ்வர் நகர் பகுதியில் இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் அங்கமான ஶ்ரீரங்கம் அபாகஸ் அகாடமி இயங்கிவருகிறது இதில் 100 மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஶ்ரீரங்கம் அபாகஸ் அகாடமி சார்பாக அபாகஸ் மையங்களுக்கு இடையேயான போட்டி…

தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுப்பட்டனர்..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலகத்தில் உள்ள புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர்…

திருச்சி 45,46 வார்டுகளில் உள்ள வடிகால் வாரி பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற கோரி மாநகராட்சி ஆணையரிடம் சாமானிய மக்கள் நலக் கட்சியினர் மனு.

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனிடம், சாமானிய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 45 மற்றும் 46 ஆகிய வார்டுக்கு…

காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், திருச்சியில் கட்டி முடிக்கப்பட்ட மணி மண்டபங்களை திறக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள, பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், சர். பி.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் மணிமண்டபங்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், திருச்சி மாநகர்…

விவசாயிகளை பழிவாங்கும் எண்ணத்தில் திமுக அரசு செயல்படுகிறது – விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையிலும், மாநில நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, மேகராஜன், வழக்கறிஞர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…

மனித உரிமை தினத்தை முன்னிட்டு திருச்சி 27-வது வார்டில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர் அன்பழகன்.

திருச்சி மாநகராட்சியின் 5 -வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு பட்டாபிராமன் பிள்ளை தெரு பகுதியில் ஆல்செயிண்ட்ஸ் பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் , சங்கீதபுரம் , ஆட்டுமந்தை தெரு ,…

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21வது ஆண்டு பட்டமளிப்பு விழா – 369 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்.

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவானது எம்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் அவர்கள் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின்…

கிறிஸ்தவ பறையர்களுக்கு பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டும் – மத்திய, மாநில அரசுகளுக்கு வெள்ளாமை இயக்கம் வலியுறுத்தல்.

திருச்சியில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;-தமிழக மக்கள் தொகையில் 3.4 சதவீதம் பேர் கிறிஸ்தவ பறையர்களாக இருக்கிறார்கள். அந்த மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள்…

இதயத் துடிப்பை பதிவு செய்யும் நவீன கையடக்க வாயன்ஸ் ECG கருவி அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.

இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க வாயன்ஸ் ECG கருவியின் அறிமுக நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மணிகண்டராமன் ராமபத்திரன்…

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சரின் மகன் அருண் நேரு திருச்சியில் போட்டியா???..

திமுக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மகன் அருண் நேரு. இவர் தற்போது தங்களுக்கு சொந்தமான தொழில்களை கவனித்து வருகிறார். அதே சமயம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.…

திருச்சி சாலை விபத்தில் திருநங்கைகள் பலி போலீஸார் விசாரணை.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தன்யா(25), தமிழ் (29) ஆகிய இரு திருநங்கைகள் இன்று விடியற்காலையில் திருச்சி பழை பால்பண்ணை அருகே இருசக்கர வாகனத்தில் தங்களின் வீட்டிற்கு வந்து கொண்டுயிருந்த…

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறக்க கோரி தமிழர் தேசம் கட்சியினர் நூதன போராட்டம்..

திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டுமான பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை திறக்கப் படவில்லை.…

அபராத வட்டியை தவிர்க்க வருமான வரியினை உரிய தவணையில் செலுத்து வேண்டும் வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி திருச்சியில் பேச்சு.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை சார்பில் வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கான வருமானவரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்…