உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு REHABINDIA CHARITABLE TRUST சார்பாக திருச்சி பாரதியார் சாலை பகுதியில் உள்ள கூட்டரங்கில் சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்காரம் போட்டி மற்றும் ஒப்பனைகளை கலைஞர்களுக்கான மாநில அளவிலான போட்டியும் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ,கர்நாடக, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பான கலைஞர்கள் கலந்து கொண்டு 45 நிமிடங்களில் மணப்பெண் அலங்காரம் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் போட்டியானது வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு இந்த போட்டி நடத்தப்பட்டதாக REHABINDIA CHARITABLE TRUST நிறுவனர் சக்திவேல் தெரிவித்தார் .