ஜுன் 21 SDPI கட்சி தொடங்கி 13வது ஆண்டையோட்டி இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதனடிப்படையில் திருச்சி மாவட்டம் சார்பாக ஜீன் 21 காலை 07-30 மணியளவில் திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியும் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிற்கு திருச்சி மாவட்ட தலைவர் இமாம் ஹஸ்ஸான் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
மாவட்ட பொதுசெயலாளர் நியமத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏர்போர்ட் மஜித் உறுதிமொழி கோஷங்கள் எழுப்பினார். மேலும் மாவட்ட செயலாளர் முபாரக் அலி நன்றியுரை நிகழ்த்தினார். மேலும் மாவட்ட துணைத்தலைவர் பிச்சைகனி, மாவட்ட பொருளாலர் சுஹைப், மாவட்ட செயலாளர் காதர், மற்றும் SDTU தொழிற்சங்க மாநில செயலாளர் ரபிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும், தொகுதி நிர்வாகிகளும், வர்த்தக அணி நிர்வாகிகளும், தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.