திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்.பி. பா. குமார், வளர்மதி, முன்னாள் துணை மேயர் சீனிவாசன் , அதிமுக முன்னாள் சட்டமன்றத் கொறடா மனோகரன் உள்ளிட்டோர் இன்று மதியம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணனை சந்தித்து எஸ் ஐ ஆர் ல் நடைபெறும் முறைகேடுகளை களைய வேண்டும் என மனு அளித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி. பா.குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கூறும் போது…. இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் சுருக்க பணியினை மேற்கொண்டு நடத்தி வருகிறது. அது தொடர்பாக எங்களுடைய பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் பெயரில் அது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியரை அணுகி அதில் உள்ள குறைகளை கூற வேண்டும் எனக் கூறியதன் அடிப்படையில் நாங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை இன்று சந்தித்து மனு அளித்துள்ளோம்.

மாவட்ட ஆட்சியரிடம் இதில் உள்ள குறைகளை கூறினோம் , மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பாகவும், நேர்மையாகவும் நியாயமாகவும் இந்த பணிகள் நடக்க வேண்டும் என நினைக்கிறார். அதன்படிதான் செயல்படுத்திக் கொண்டுள்ளோம் எனக் கூறினார். அவருக்கு கீழ் உள்ள அலுவலர்களும் அது சிறப்பாக செயல்படுத்துவதாக தெரிவித்தனர்.
பி எல் ஒ கள் மீது சில குறைபாடுகள் குறைகள் வந்து கொண்டிருக்கின்றன எங்களது பி எல் ஒ 2 கள் இது குறித்து எங்களிடம் புகார் கூறி வருகின்றனர். அது குறித்து உடனடியாக நாங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூறி வருகிறோம் அவர்கள் அதை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளனர். பி எல் ஓ கள் அவர்கள்தான் ஒவ்வொரு வீடு வீடாக சென்று விண்ணப்பத்தை கொடுத்து அதை பூர்த்தி செய்து வாங்க வேண்டும், ஆனால் பல இடங்களில் அது சரியாக நடைபெறவில்லை. குறிப்பிட்ட சில இடங்களில் திமுகவினர் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்தி அவர்கள் மொத்தமாக விண்ணப்பங்களை வாங்கி அவர்கள் வீடு விடாக சென்று கொடுக்கின்றனர்.

இதனை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் அவர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நாங்களும் அதை கண்காணித்து வருகிறோம். இது போன்ற தவறுகள் எங்கும் நடக்கக்கூடாது என்பதை அவர்களிடம் கேட்டுள்ளோம். பி எல் ஓ கள் அவர்கள் குறிப்பிட்ட நபர்களிடம் கணக்கீட்டு படிவத்தை வழங்குவதாக எங்கள் பி எல் ஏ 2 சொன்னதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளோம். அதில் உள்ள உண்மை தன்மையை அலுவலர்களை வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . எஸ் ஐ ஆர் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கனவு, வாக்காளர்கள் இரட்டைப்பதிவு, வெளியூர் சென்றவர்கள், இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்பதுதான். அதைத்தான் இந்த எஸ் ஐ ஆர் செய்கிறது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதனை எதிர்த்து எஸ் ஐ ஆர் ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
