ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மீது வேற்று மதத்தினர் படையெடுத்த பொழுது கோவிலை பாதுகாக்க முய சித்த 12000 வைஷ்ணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையிலும், கோவிலில் முகாமிட்டிருந்த வேற்று மத தளபதியை இங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக
கோவிலில் நடனம் மற்றும் கைங்கரியம் செய்து வந்த வெள்ளையம்மாள் என்பவர் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் மேல் தளபதியை அழைத்துச் சென்று அங்கிருந்து அவரை தள்ளிவிட்டு பின்னர் தன் உயிரையும் தியாகம் செய்தார்.
அவரது இந்த தியாகத்தை நினைவூட்டும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென்பாரத திருக்கோவில் திருமடங்கள் அமைப்பு சார்பில் இன்று வெள்ளைகோபுரம் முன் மோட்சதீபம் ஏற்றி வழிபாடு நடத்த முற்பட்டனர். அதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் அனுமதி மறுத்ததை யடுத்து திருக்கோவில் திருமடங்கள் மாவட்ட அமைப்பாளர் அனந்த பத்மநாதன் தலைமையில் பக்தர்கள் பாசுரங்கள் பாடினர்.
அதன்பின் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பாளர் சரவண கார்த்திக் 12000 வைஷ்ணவர்கள் மற்றும் வெள்ளையம்மாள் உயிர் தியாகம் குறித்து பேசினார். பின்னர்தென் பாரத திருக்கோயில் திருமடங்கள் திருச்சி மாவட்ட துணைத் தலைவர்கள் சங்கர் ஜி, அழகு யுவராஜ், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட அனைவரும் வெள்ளை கோபுரத்துக்கு மலர் தூவி தரைையில் விழுந்து வழங்கினர். பின்னர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.