தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொரானோ பேரிடர் காலத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைகளில் கொரானா நோயாளிகள் / உதவியாளர்களுக்கு மற்றும் ரெங்கா ரெங்கா கோபுரம் வாயிலில் உள்ள ஏழை எளியோர் , ஆதாரவற்றோர் , முதியோர்களுக்கு தினசரி 1200 நபர்களுக்கு (சாம்பர், தக்காளி ,தயிர் சாதங்கள் ) வாழை இலையில் கட்டப்பட்ட உணவுப் பொட்டலங்களாக வழங்கப்பட்டு வருகின்றது, மேலும் முக கவசம் , கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அன்னதான திட்டத்திற்கு அரிசி , மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் தர விரும்புவர்களும் பொருட்களாக தந்து திருக்கோயில் ரசீது பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *