சட்டமேதை டாக்டர். அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்குத் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கிழக்கு தொகுதி செயலாளர் கனியமுதன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளரும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், தலைமை சபை அன்பே தொண்டு நிறுவனத்தின் போதகர் ஆபிரகாம், திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட தலைவர் விஜயநிர்மலா மற்றும் பந்தல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு 200ஏழை எளிய பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கினார்கள்.

மேலும், 100 பள்ளி மாணவ மாணவிகளுக்கான நோட்டுப்புத்தகம் . பேனா, பென்சில் ஆகியவை வழங்கினார். மேலும் சிறந்த முறையில் பணியாற்றி வரும் திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் கோட்ட தலைவர் விஜயநிர்மலா மற்றும் போதகர் ஆபிரகாம் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் விடுதலை சிறுத்தை கட்சியின் புதிய கொடி கம்பம் நடப்பட்டு அதில் புதிய கொடியை தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் பிரபாகரன் ஏற்றினார்.

இந்நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், ரஹீம், மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, மலைக்கோட்டை தொகுதி செயலாளர் ஆல்பர்ட்ராஜ், இளம் சிறுத்தைகள் பாசறை பகுதி செயலாளர் ஆல்பர்ட்ஹென்றி, வரதன், பகுதி செயலாளர் ஞானம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலத் துணைச் செயலாளர் பெரோஸ்கான், மாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *