தமிழ் குறள் அறக்கட்டளையின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடன் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் அகற்றுவது என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லாதது போல் தெரிகிறது. மேலும் அரசு மதுபான கடையினால் அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களில் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் ஊரை தாண்டி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் குறள் அறக்கட்டளையின் சார்பில் பொதுமக்கள்200 பேரிடம் கையெழுத்து பெற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடன் மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழ் குறள் அறக்கட்டளை நிறுவனர் தங்கமணி கூறுகையில்..,

ஊருக்கு ஒதுக்கு புறமாகவும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலும் மதுபான கடைகளை கொண்டு சென்றாள் மது பிரியர்கள் அங்கு செல்ல சிரமப்படுவர், மேலும் அதனால் குடிப்பவர்கள் எண்ணிக்கை குறையும் என்ற நோக்கில் இம்மானுவை அளித்துள்ளோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்