கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களாகிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரணம், மற்றும் தொழிலாளர்களுக்கு ESIC மருத்துவ வசதிக்கான தகுதி குளறுபடிகள் – சம்பந்தமாக தமிழ் நாடு பாரதீய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஹரி பிரசாத் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தற்போதைய கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில் , நோய்த் தொற்று அபாயம் இருந்தும் தன் உயிரை துச்சமென நினைத்து 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் 6,000 தொழிலாளர்கள் முன்களப் பணியாளர்களாக கொரோனா நோயாளிகளுக்கும் , பொதுமக்களுக்கும் அவசர மருத்துவ தேவைகளை வழங்கி வருகின்றோம் . இந்தப் பணியில் ஆம்புலன்ஸ் திட்டத்தின் கணேசன் , செல்வம் மற்றும் பிரபு ஆகிய 3 தொழிலாளர்கள் கொரோனா நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர் , தமிழக அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் இந்தப் பணியில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பம் நிர்க்கதியாக நிற்கும் அவலம் நிலவுகின்றது . கொரோனா நோய் தொற்றால் உயிரிழக்க நேரிடும் பத்திரிகை , ஊடக செய்தியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது . கொரோணா தடுப்பு பணியில் உயிர் இழந்த ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்புப் பணி ஆணையர் மூலமாக நடைபெற்று வருகிறது . மத்திய உள்துறை அமைச்சகம் 14.03.2020 அன்று , கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் கருணைத் தொகை வழங்கும்படி தெரிவித்துள்ளது . இந்த நிலையில் , கொரோனா நோயாளிகளை நேரடியாக கையாண்டு உயிரிழந்துள்ள ஆம்புலன்ஸ் தொழிலாளர் குடும்பங்களுக்கு , இதுவரை தமிழக அரசு சார்பாக எந்த நிவாரணமும் அறிவிக்கப்படாதது வருத்தத்தை அளிக்கின்றது . இதுகுறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு 02.06.2021 அன்று எங்களது தொழிற்சங்கம் சார்பாக மின்னஞ்சல் மூலம் மனு கொடுக்கப்பட்டுள்ளது . மேற்கண்ட அடிப்படையில் , கொரோனா நோய் தாக்கப்பட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலையும் , ரூபாய் 50 லட்சம் நிதி உதவியும் வழங்க வேண்டுகிறோம் .

மேலும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழக சுகாதார துறையின்கீழ் GVK – EMRI என்கிற நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது . ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ESI சட்ட பாதுகாப்பு வரம்பிற்குள் வருகின்றனர் , அதன்படி தொழிலாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ESIT மருத்துவமனையில் மருத்துவ வசதி மற்றும் சமூக பாதுகாப்பு பலன்களைப் பெற்று வருகின்றனர் , ESI திட்டத்தில் உறுப்பினராக தொடர்வதற்கு தகுதியை நிர்ணயிக்க 8 மணி நேரத்திற்கான ஊதியம் , ஒரு மாதத்திற்கு ரூபாய் 21 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் , இதில் மிகை நேர பணிக்கான ( Over Time ) தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது . தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பொருத்தவரையில் , ஒரு ஷிப்ட் என்பது 12 மணி நேரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . 8 மணி நேரத்திற்கும் 12 மணி நேரத்திற்கும் இடைப்பட்ட நேரம் “ ஸ்பிரட் ஓவர் ஷிப்ட் ” என அழைக்கப்பட்டு அதற்கு தனியாக தொகை வழங்கப் படுகின்றது . இந்தத் தொகையை ESI தகுதி நிர்ணய கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது . ஆனால் GVK – EMRI நிர்வாகம் ஷிப்ட் ஸ்பிரட் ஓவர் அலவன்ஸ் தொகையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தகுதியை நிர்ணயிக்கின்றது , ESI சட்டத்திற்கு புறம்பான இந்த காரணத்தால் பெரும்பாலான தொழிலாளர்கள் ESI சமூக பாதுகாப்பிற்கான தகுதியை இழந்து உள்ளனர் . சட்டத்திற்குப் புறம்பான மேற்படி விசயத்தை சரி செய்ய , நிர்வாகத்திற்கு 19.04.2021 அன்று கடிதம் கொடுக்கப்பட்டது . ஆனால் , நிர்வாகம் தனது தவறை சரி செய்துகொள்ள முன்வரவில்லை . இதுகுறித்து ESI மண்டல இயக்குனர் , சென்னை அவர்களுக்கு 12.06.2021 அன்று மின்னஞ்சல் மூலமாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது . GVK – EMRI நிர்வாகத்தின் செயல்பாட்டால் 108 ) ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் ESI சட்டத்தின்படி ESI சட்டத்தின்படி கிடைக்க வேண்டிய சமூக பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை . இதற்கு கடந்த 4 மாதத்திற்கும் மேலாக பல்வேறு முயற்சிகள் BMS சங்கத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது , இருந்தபோதும் சமூக பாதுகாப்பு கிடைப்பது காலதாமதம் ஆகின்றது . ஆகவே , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு உடனடியாக சமூக பாதுகாப்பு திட்டம் கிடைத்திட தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம் . மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு 108 ஆம்புலன்ஸ் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான நீங்கள் எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்