திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகம் உள்ளது . இங்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரியாக சந்திரமோகன் ( வயது 50 ) தற்போது பணியாற்றி வருகிறார் . இதே அலுவலசுத்தில் திருச்சி பாலக்கரை கீழபுதூர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் வயது ( 40 ) என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் வாகனத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வந்தார் .

நேற்று மாலை டிரைவர் சந்திரசேகரிடம் , வாகனத்தின் லாக்புக்கை கொண்டு வரும்படி சந்திரமோகன் கூறியுள்ளார். உள்ளே வந்த டிரைவர் சந்திரா சேகர் அதிகாரியிடம் தனக்கு இரண்டு மாதங்களாக அரியர் பணம் வரவில்லை என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த டிரைவர் , அங்கிருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து , அதிகாரியின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் , தலையில் காயம் அடைந்த அவர் , திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.