தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழகம் நூறு தளபதி நூறு தமிழக முதல்வரின் 100 நாள் சாதனை விளக்க விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர் விருது வழங்கும் விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில மகளிர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்க மாநில தலைவருமான மதனா வரவேற்புரை ஆற்றிட, விழாவினை மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் இயக்குனர் லீமாரோஸ் மார்ட்டின் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர் விருது வழங்கி சிறப்பித்தனர்.

இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்கள் உள்ளிட்ட 106 பேருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்