திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ,வயலூர் அருள்மிகு முருகன் திருக்கோயில், திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், மலைக்கோட்டை வளாகக் கோயில்கள் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் வருகின்ற 2.8. 2021 மற்றும்

3. 8 2021 ஆகிய இரு நாட்களில் நடைபெறவிருக்கும் ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு முதலிய நிகழ்வுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக திருக்கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆகம விதிகளின்படி பூஜை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் கொரோனா நோய்த் தொற்று பரவலின் காரணமாக இந்த நாட்களில் பொது தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் கூடுவதற்கும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்