ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி இருப்பதாக உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால் தாங்கள் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்வோம் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாட்டை முழுமையாக ஆட்சி செய்வதற்கான வேலைகளில் தலிபான் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் ஒன்றை தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தியிருப்பதாக உஸ்பெகிஸ்தான் அறிவித்துள்ளது .

தங்கள் நாட்டின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததால் ஆப்கான் ராணுவ விமானத்தினை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆப்கனின் எல்லையை ஒட்டியிருக்கும் உஸ்பெகிஸ்தானின் தெற்கு பகுதியில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது .சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் , அவர்களின் கதி என்ன ஆனது என எந்தத் தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை . விமானத்தின் விமானி மட்டும் பாராசூட் மூலம் உயிர் தப்பியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

காபுல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்த போது உஸ்பெகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் தப்பிச் சென்ற 84 ஆப்கான் ராணுவ வீரர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது . இருப்பினும் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அந்நாடு செய்து தந்திருப்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published.