மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1346 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தகடை சிக்னல் பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்ஜோதி, கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது அந்தவழியாக வந்த ஆம்புலன்ஸ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாதபடி அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் வேறு வழியாக ஆம்புலன்ஸ் சுற்றி மருத்துவமனைக்கு சென்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் இந்த பொறுப்பற்ற செயலை கண்ட பொதுமக்கள் முகம் சுளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்