சென்னை ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவர் தனது இடுப்பில் 28 லட்ச ரூபாயை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில், அவரை சோதனை செய்து அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன எனவே வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் மற்றும் கள்ள சாராயம் கடத்தி வருகின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த ரயில் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது , குண்டூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்து கொண்டிருந்தார் அவரை ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது அவரின் இடுப்பு பகுதியில் 28 லட்சம் ரூபாயை மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கணக்கில் வராத பணம் என தெரிய வந்தது , மேலும் கணக்கில் வராத பணம் என்பதால் 28 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *