திருச்சி உறையூர் நாச்சியார் பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் கல்விக்கூடத்தில் ஆய்வக தொழில் நுட்பவியலாளர் பயிற்சி பெற்று வந்தவர் காயத்திரி வயது(27). தனது தோழியுடன் இந்த கல்விகூடத்தின் அறையில் இருந்தபோது திடீரென அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அறையினுள் புகுந்து காயத்திரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகளை (செயின் மற்றும் வளையல்) கொள்ளையடித்துச் சென்றார். உடனடியாக உறையூர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காயத்திரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கே.கே.நகர் சிம்கோ மீட்டர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் லியோ (எ) ரெனால்டு ரோஸ் லியோ வயது (24) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கின் புலன் விசாரணை முடிந்து எதிரியின் மீதான குற்றப்பத்திரிக்கை திருச்சி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளது அதில் லியோ (எ) ரெனால்டு ரோஸ் லியோ என்பவருக்கு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதம் ரூ.5000‌ம் விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். அதனை தொடர்ந்து குற்றவாளி திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.