தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி சட்ட நடவடிக்கை குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உதுமான் அலி பேட்டி அளிக்கையில்:- இதில் இஸ்லாமிய சிறை வாசிகளை விடுதலை செய்ய கோரி 1 கோடி கையொழுத்து பெரும் இயக்கம் துவக்கப்பட்டது. தற்போது 1லட்சம் கையெழுத்து பெறப்பட்டு தொடர்ந்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த கையெழுத்து இயக்கமானது விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம்.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆதிநாதன் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். 40க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் 20ஆண்டுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். வருடம் தோறும் செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். அப்படி செய்யப்படக் கூடும் என்ற நிலையில் அந்த நடவடிக்கையானது கால தாமதமாகி வருகிறது. சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாது கடந்த 20 ஆண்டு கோரிக்கையாக இருந்து வருகிறது. சிறை கைதிகள் விடுதலையால் பிரச்சனை என பாசிச தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் எந்த பிரச்சனையும் வராது எங்கள் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய கைதிகளை விடுதலை தொடர்பாக தமிழகத்தில் உள்ளஅனைத்து இஸ்லாமிய இயக்கம், மதகுருமார்கள், ஜமாத்தார்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட நீதி அரசர் ஆதிநாதன் குழு விரைந்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட வரவேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கையாக முன்வைத்து வைத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இஸ்லாமிய அமைப்பினருக்கு ஒரு மேயர், துணை மேயர் கூட வழங்கப்படவில்லை. எனவே, தமிழக முதல்வர் இதை கருத்தில் கொண்டு மேயர் துணை, மேயர்தர வேண்டும் என கூறினார். இசுலாமிய சிறைவாசிகளை விடுதலையில் தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கவில்லை என்றால் தமிழக அளவில் இஸ்லாம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.இந்த பேட்டியின் போது தலைவர் சேக் இப்ராகீம், துணை தலைவர் சாபில், இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *