இந்தியாவில் பிரதமர் மோடி அரசு பதவி ஏற்றது முதல் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது இதனை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. எல்ஐசி ரூ 38,04,610 கோடி மதிப்புள்ள சொத்துகளோடு, ரூ 34,36,686 கோடி ஆயுள்நிதியோடு, 14 நாடுகளில் கிளைகள் கொண்டுள்ளது.

மேலும் ஆண்டுதோறும் 6.82லட்சம் கோடி வருமானத்தை ஈட்டும் எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது அறிவிப்பை வெளியிட்டது இதனை கண்டித்து இந்தியா முழுவதும் எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகியவை ஒன்றிணைந்த தஞ்சை கோட்டம் சார்பில் திருச்சி உறையூர் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்மண்டல ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் சாமிநாதன் ஆர்ப்பாட்ட உரைகள் வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு கோடி கோடியாக அள்ளித் தரும் அட்சய பாத்திரமாக விளங்கும் எல்ஐசி என் பங்கை விற்பனையை கைவிட வேண்டும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த தென்மண்டல ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் சாமிநாதன்.

என்றைக்கு எல்ஐசியின் பங்கு விற்பனையை சந்தைக்குக் கொண்டு வருகிறார்களோ அன்று இந்தியா முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள், வருகின்ற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் உள்ள ஊழியர்கள் பொதுத்துறை பாதுகாக்க வேண்டும், இந்த நாட்டின் தொழிலாளர் உரிமை சாதாரண அமைப்பு சாரா தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க வேண்டும், விவசாய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதில் எல்ஐசி ஊழியர்களும் பங்கு கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி எஸ்இசட்ஐஇஎப் துணைத்தலைவர் சுவாமிநாதன், டிஆர்இயு திருச்சி கோட்ட தலைவர் மாதவன், பிஎஸ்இஎல்இயு மாவட்ட உதவி செயலாளர் அஸ்லாம்பாட்சா, பெல் சிஐடியு பொதுச்செயலாளர் பிரபு, எம்ஆர்ஜிஐஇஏ இணைச்செயலாளர் ராஜமகேந்திரன், எல்ஐசி முகவர் சங்க தென்மண்டலக்குழு உறுப்பினர் பொன்.வேலுச்சாமி, ஏஐபிஓசி வங்கி அதிகாரிகள் சங்க சந்தானம் ஆகியோர் பேசினர். முன்னதாக ஐசிஇயு தஞ்சைக்கோட்ட துணைத்தலைவர் ஜோன்ஸ் வரவேற்றார். முடிவில் ஐசிஇயு தஞ்சைக்கோட்ட இணைச்செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *