இயற்கை வளங்களில் மிக முக்கியமானது மண் இந்த மண் வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது மண்வளம் மாசடைந்தால் பூமியில் வாழும் மனிதர்கள் பறவைகள் மற்றும் அனைத்து வகையிலான உயிரினகளுக்கு உண்ண உணவு கிடைக்காது நல்ல தண்ணீர் கிடைக்காது ஆகவே இந்த பூமியில் வாழும் நாம் ஒவ்வொருவரும்‌ இந்த மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் இந்த பூமியை பசுமையாக வைத்து கொள்ள வேண்டும் ஆகவே இதை உணர்ந்து இயன்ற வரை சிறு இடங்களில் கூட சிறு மரகன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் கொய்யா மாதுளை உள்ளிட்ட பழவகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

இந்த சமூகத்தில் பல்வேறு திறமைகளை வெளிபடுத்தி வரும் திருநங்கைகளுக்கு இந்த பழவகையிலான மரகன்றுகள் வழங்கப்பட்டது. இம்மரகன்றுகளை திருநங்கைகள் தங்களது பகுதியில் நட்டு வளர்க்க ஆர்வமுடன் வாங்கி சென்றனர் இந்நிகழ்வானது திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா கலந்து கொண்டு பழவகையிலான மரகன்றுகளை திருநங்கைகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் சேவ் டிரஸ்டின் நிர்வாக இயக்குநர் கஜோல் தலைமையில் திருநங்கைகள் திரளாக கலந்து கொண்டு மரகன்றுகளை பெற்று கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலாளர் அல்லி கொடி அனுஷ்மா நந்தினி மைக்கேல் மணி கார்த்தி மற்றும் திரளான திருநங்கைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *