ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் பணி நாளை 11.06.2021 அன்று ஒருநாள் மட்டும் நிறுத்தி வைப்பதாக திருச்சி மாநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கும் அதனைத் தொடர்ந்து ஜூன் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய இருசக்கர வாகனங்கள் 6566, ஆட்டோ 195 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 73 என மொத்தம் 6916 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைத்தனர்

இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதல் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி துவங்கியது இந்நிலையில் நாளை திருச்சி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்வதை ஒட்டி நாளை 11- 6 – 2021 அன்று மட்டும் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக திருச்சி மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் 12ஆம் தேதி வழங்கப்படும் வாகனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்