தமிழகத்தில் ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக டெல்டா மாவட்டத்தில் அனைத்து ஏரிகளில், தண்ணீர் செல்லும் நீர் நிலைகள் என 647 இடங்களில் ரூபாய் 64கோடி செலவில்தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 12ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உள்ளார். முன்னதாக தூர்வாரும் பணிகள் ஆய்வு செய்வதற்காக இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக கல்லணை சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்துதிருச்சிக்கு வருகை தந்த அவர் திருச்சி குழுமணி உய்யகொண்டான், கலிங்கு புலிவலம், மணற்போக்கி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.நீர்வள ஆதாரத்துறை, திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின்கட்டுப்பாட்டின்கீழ் பாசன ஆதாரங்களில் திருச்சி மாவட்டத்திலுள்ள 20 பணிகளுக்கு ரூ.177.30இலட்சம் மதிப்பீட்டில் 66.11 கிமீ தூரம் வரை தூர்வார வழிவகை செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொடியாலம் மற்றும் புலிவலம் கிராமம், புலிவலம் மணற் போக்கியிருந்துசெல்லும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட வேண்டும் என விவசாயிகள் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே மேற்படி கோரிக்கையான வடிகால் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலைகிராமம், காவிரி ஆற்றிலிருந்து பிரியும் உய்யக்கொண்டான் வாய்க்காலின் இடதுகரை மைல் 9.5 மீட்டர் மணற்போக்கி அமைந்துள்ளது. இம்மணற்போக்கி மூலம் செல்லும் வடிகால் வாய்க்காலானது புலிவலம்கிராமத்தில் ஆரம்பமாகி கொடிங்கால் வடிகாலில் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது.மழை மற்றும் வெள்ளக்காலங்களில் வரும் கூடுதல் நீரினால்நீரோட்டம் தடையேற்பட்டு அப்பகுதி பாசன நிலங்கள் மற்றும் கிராம பகுதிகள் மிகவும் பாதிப்புகள்ஏற்படக்கூடிய நிலை இருந்தன. எனவே விவசாயிகளின் கோரிக்கையின்படி மேற்படி புலிவலம் மணற்போக்கி வடிகால்வாய்க்கால் LS 100மீ முதல் 1200மீ வரை தூர்வாரும் பணிக்கு ரூ.29.70 இலட்சம் மூன்று பணிகளுக்குநிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிதியின்கீழ் தற்போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.இப்பணியின் மூலம் கொடியாலம் மற்றும் புலிவலம் கிராம விவசாயிகள் அனைவரும்பயன்பெறுவார்கள்.ஆய்வின்போது பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்சக்சேனா,அமைச்சர்கள் துரைமுருகன் கே.என்.நேரு, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன்,ஸ்டாலின்குமார்,பழனியாண்டி,இனிகோ இருதயராஜ்,கதிரவன்,அப்துல்சமத் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *