திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் நிலவழகி பொய்யாமொழி என்ஜினீயரிங் பட்டதாரி இவருக்கு சென்னையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்துள்ளது. இதனால் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை நிலவழகி பொய்யாமொழி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலுவிடம் இன்று வழங்கினார்.

இது குறித்து நிலவழகி பொய்யாமொழி கூறுகையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியின் மூலம் எனது பணியை கிராம மக்களுக்கு செவ்வனே செய்து வந்தேன். இருப்பினும் நான் என்ஜீனியரிங் படித்து உள்ளதால் எனக்கு சென்னையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணி கிடைத்துள்ளது. எனவே எனது பஞ்சாயத்து தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நான் மக்கள் சேவை பணியை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது சூழ்நிலை காரணமாக எனது பதவியை ராஜினாமா செய்வது மிகவும் வருத்தமாக உள்ளதாக தேரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *