திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகளையும், மக்கள் விரோத 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் ரத்து செய்ய வலியுறுத்தி, வேலை இழப்பினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சினை தீர்வு செய்யவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஆட்குறைப்பு சம்பள வெட்டு ஆகியவற்றை தடை செய்யவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும், புதிய பணியிடங்களை உருவாக்க கூடாது என்ற தடையை ரத்து செய்யவும்

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும், வருமான வரி கட்டுவதற்கான வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்கும்படியும் வலியுறுத்தப்பட்டது. ஒரு நபருக்கு 10 கிலோ உணவு தானியம் வீதம் ஆறு மாதங்களுக்கு விலை இல்லாமல் வழங்கவும், மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும், கட்டணமில்லா பொதுமருத்துவ சிகிச்சை உறுதிப்படுத்தவும், சுகாதார

களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பான உடைகள் மற்றும் கருவிகள் வழங்கும்படியும் அவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தவும் வலியுறுத்தப்பட்டது எல்லோருக்கும் கட்டணமின்றி தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது மேலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை உடனே நிறுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎஃப் தொழிற்சங்கம் மாநில பேரவை செயலாளர் எத்திராஜ், திருச்சி மாவட்ட கவுன்சில் தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சில் செயலாளர் நெல்சன், பொருளாளர் ராஜேந்திரன், ராமலிங்கம், இளங்கோ, சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜ், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சுரேஷ், நடராஜா, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் வெங்கட் நாராயணன், ஹெச்எம்எஸ் மாவட்ட செயலாளர் ஜான்சன், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் மகேந்திரன் மற்றும் விவசாய சங்கங்கள் தலைவர் அயிலை சிவசூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்