திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பதார்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் மூளைச்சாவு அடைந்த நபரின்உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தாருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார் – இந்நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் முதல்வர் வனிதா திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் –

 

கொரோனோ காலங்களில் மற்ற மருத்துவம் சரியாக பார்க்க வில்லை என சில மருத்துவமனைகள் மீது புகார் இருந்தது – ஆனால் திருச்சியை பொறுத்த வரை எல்லா துறைகளிலும் மிக சிறப்பாக செயலாற்றி வந்துள்ளனர். ஐசி.ஐசி.ஐ நிறுவனம் மூலம் ஆர்.டி.பி.சி.ஆர் கருவியை வழங்கு உள்ளனர்,மேலும் பலர் மருத்துமனைக்கு பல உதவியை செய்து உள்ளனர். நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விலக்கு பெற முதல்வர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். முதல் கூட்ட தொடரிலே சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி அழுத்தம் கொடுப்பதே எங்கள் நிலைபாடு. 19 லட்சம் தடுப்பூசிகளை கூடுதலாக மத்திய அரசு அனுப்பியது – நாள்தோறும் 3 லட்சம் முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் சார்பில் போட்டுள்ளனர். 2 கோடியே 49 லட்சம் பேருக்கு… ஏறத்தாழ 2.5 கோடி பேருக்கு தடுப்பூசிகளை செலுத்தி உள்ளோம். மருத்துவமனைக்கு என்ன தேவை,எந்தெந்த துறைகளில் மருத்துவர்கள் தேவை என்பது குறித்து கேட்டுள்ளோம் கண்டிப்பாக அதனை நிரப்ப நடவடிக்கை எடுப்போம். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்விற்காக குறைந்த அளவில் மட்டுமே அப்ளை செய்துள்ளனர் என்ற கேள்விக்கு :

இன்னும் கூட கால அவகாசம் உள்ளது,மாணவர்களுக்கு தேவையான பயர்ச்சி அளிக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,தேர்வுக்கு முன்பாக இன்னும் ஏரளமான மாணவர்கள் கண்டிப்பாக தேர்வுக்கு தயார் ஆவார்கள். கொரோனோ காலகட்டத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு பணி வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம், யாருக்கெல்லாம் பணி வழங்க முடியுமோ அவர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்படும். என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்