ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் 3- வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கூட்டணிக் கட்சியினருடன் ஆலோசனை செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்குமாவட்டம் சார்பில் பாலக்கரையில் மாவட்ட செயலாளர் ஹபிப் ரகுமான் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில துணை செயலாளர் வி.எம் பாருக் மாணவர் அணி செயலாளர் திருச்சி அன்சர் இளைஞர் அணி அமீரூதீன் அப்துல்சலாம் எஸ் டியூ ஆட்டோசங்கம் பரகத் அலி சாதிக்குல் அமின் கே.கே.மஸ்தான் போட்டோஷாகிர் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஹீமாயூன் நன்றி கூறினார்.


 

Leave a Reply

Your email address will not be published.