ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் வசித்து வருபவர் நாச்சிமுத்து வயது 88 இவர் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இன்று காலை ரெங்க நகர் பகுதியிலுள்ள வங்கியில் ரூபாய் 2.5 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது இவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவரிடம் இருந்த பணப்பையை பிடுங்கிக்கொண்டு கண்இமைக்கும் நேரத்தில் சிட்டாக பறந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நாச்சிமுத்து புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த மாதம் சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர் பிடிங்கி சென்ற சம்பவத்தை தொடர்ந்து அதே வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற முதியவரிடம் பைக் திருடர்கள் மீண்டும் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். பட்டப்பகலில் இந்த சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்