திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் தயாளமூர்த்தி பாலக்கரை காவல் நிலையத்தில் தனது தந்தை காணாமல் போய்விட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் வயது 71 ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர் 2003 ஆம் வருடம் நடந்த விபத்தில் தலையில் அடிபட்டு இரயில்வே பொன்மலை மருத்துவமனை மூலமாக அரசு மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும் . அதன் பின் உடல்நிலை தேறி ஓரளவு சுயநினைவுயின்றி குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். மேலும் வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்து விட்டு வீட்டிற்கு வந்து விடுவதாகவும், கடந்த 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் வெள்ளை சட்டை முழுக்கை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்து கொண்டு டீ குடிக்க சென்றவர் மீண்டும் வீடு வந்து சேரவில்லை. உடனடியாக இவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கும் தேடி கிடைக்காததால் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கட்டதுள்ளது.

இவரின் அங்க அடையாளங்கள் : 1. உயரம் : 5 / 12 அடி . 2. மாநிறம் : இந்து வாணிய செட்டியார் . 3. அவரது தலையின் இடதுபுறம் அறுவை சிகிச்சை செய்த தழும்பு உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்