திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான சில்லரை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். திருச்சி மாவட்டத்தை விட தொற்று குறைந்த பல மாவட்டங்களில் மார்க்கெட் அதே இடத்தில் வியாபாரம் செய்யப்படும் நிலையில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளை மட்டும் மாவட்ட நிர்வாகம் வியாபாரம் செய்யவிடாமல் தடுப்பதாக கூறி திருச்சி பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று ( 30-ந்தேதி) காலை திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளர் சுரேந்திரன் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது .பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு மாநில செயலாளர் எம்.பி.முரளிதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பின்பு கோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணனிடம் மனு கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன், மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன், இளைஞரணி தலைவர் வெங்கடேசன், வர்த்தக பிரிவு மண்டலத் தலைவர் கணேசன். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர்கள் ராஜ்குமார், சரவணன், வெங்கடேசன், பாலக்கரை மண்டலச் செயலாளர் மல்லி செல்வம், திருஞானம், சந்தோஷ், சந்திரசேகர், அஜய்கோகுல், உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *