மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது அதில் வாலிபர்கள் சிலர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதாக தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் உசிலம்பட்டி, பாண்டி கோவில் தெரு பங்களாமேடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்களை பள்ளி மாணவன் ஒருவன் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாணவனை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவன், அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பள்ளி மாணவர்களின் முழு கவனமும் அவர்களின் படிப்பின் மீதே இருக்க வேண்டும். இதுபோன்று பள்ளி மாணவர்களை போதைப்பொருள் விற்பனை செய்ய யாரேனும் வற்புறுத்தினாலும் அல்லது ஈடுபட தூண்டினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *