பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியை சேர்ந்தவர் அனுகுமாரி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆஷூ குமார் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.இவர்களின் காதல் விவகாரம் அனு குமாரியின் பெற்றோருக்கு தெரியவர, பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.தொடர்ந்து அவருக்கு வேறொரு நபரை திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.ஆனால் அனு குமாரி காதலனை தான் திருமணம் செய்வேன் என பிடிவாதமாக இருக்க, வீட்டின் ஒரு அறயில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர்.மேலும் கிரான்பூர் கிராமத்தை சேர்ந்த நபரை, அனு குமாரிக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர்.

தனக்கு விருப்பமில்லாத வேறொரு நபருடன் 2 மாதங்களாக குடும்பம் நடத்தியுள்ளார் அனுகுமாரி.தொடர்ந்து காதலனின் நினைப்பில் வாழ்ந்து வந்த அனுகுமாரி, கணவர் வீட்டாரிடம் சொல்லி விட்டு ஆஷூ குமாரைச் சந்திக்க சென்றுள்ளார்.இருவரும் சுல்தான்காஞ்ச் ரயில்நிலையத்திலிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறியுள்ளனர். பின்னர் ரயிலுக்கு உள்ளேயே கழிவறை முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *