திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் முதன்முறையாக கண்ணாடி அணிவதை தவிர்க்க அதிநவீன காண்டூரா லேசிக் சிகிச்சை குறித்து ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் பிரதீபா துணை இயக்குனர் அகிலன் அருண்குமார் டாக்டர் பிரக்யா பார்மர் லேசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அக்ஷயா டாக்டர் பிரியா மற்றும் நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது அனைத்து வயதினரும் கண் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கண்ணாடி அணிந்து வருகின்றனர் அதனால் சிலருக்கு கண் சோர்வு தலைவலி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது தற்போது அவர்கள் கண்ணாடி அணிவதை தவிர்க்க முதன் முறையாக காண்டூரா லேசிக் எனும் நவீன தொழில்நுட்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன குறிப்பாக இதன் மூலம் அறுவை சிகிச்சைகளை துல்லியமாக மேற்கொண்டு பார்வை திறனை மேம்படுத்த முடியும் மேலும் பக்க விளைவுகள் இரவு நேரத்தில் ஏற்படும் கண்கூச்சம் போன்றவற்றை குறைக்க முடியும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கண் கருவிழியில் உள்ள 22,000 மேற்பட்ட புள்ளிகளை துல்லியமாக கண்டறிந்து அதனை ஆய்வு செய்து குறைபாடுகளை மிக நேர்த்தியாக சரி செய்ய முடியும்

இதில் சிகிச்சை பெறுபவர்கள் கருவிழி கணினி மூலம் கண்காணிக்கப்படுகிறது இது சிக்கலான பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த சிகிச்சையை 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் செய்து கொள்ளலாம் குறிப்பாக சிலருக்கு கண் கருவிழியில் முறையற்ற பிறழ்வுகள் இருக்கும் அதனை கண்டறிந்து சரி செய்வதே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சமாகும் மேலும் காண்டூரா லேசிக் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் கண் பார்வை தன்னை அதிகப்படுத்த முடியும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *