ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஆபிருத்தீன் மன்பஈ தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் அர்சத் அல்தாபி, மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ராஜிக் பாகவி, சம்சுல் இக்பால், மாநில செயலாளர்கள் பாதுஷா மிஸ்பாகி, சுஹைப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மாநில தலைவர் ஆபிருத்தீன் மன்பஈ நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-

ஹிஜாப் அணிவது திருக்குர் ஆனின் சட்டமே, கர்நாடகா உயர் நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியலைமைப்பிற்கு எதிரானதாக உள்ளது. இதனை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுண்சில் தனது கண்டனத்தை பதிவு செய்கிறது. மேலும் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இதில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது இல்லை என்று உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் மேலும் அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளது. இஸ்லாத்தில் ஹிஜாப் என்பது திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான ஷரியத் சட்டமாகும். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சட்டத்தை பின்பற்றுவதை நீதிமன்றம் அல்லது வேறு எவரும் தடுப்பதை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது. இந்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகவே உள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக உள்ளது. நீதிமன்றம் பாசிச சித்தாந்தத்தை இந்த தீர்ப்பின் மூலம் அப்படியே செயல் படுத்துவதாக இருப்பது மிகவும் கவலை யளிக்கின்றது. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையும் இது போன்ற சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைக்கு விரோதமான நடவடிக்கைகளில் நீதிமன்றங்களும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கின்றது. இந்தியாவின் மதசார்பின்மையையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் சீர்குலைக்கின்ற சனாதன சக்திகளுக்கு எதிராக ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சட்டரீதியாகவும் மக்களை ஒன்றுதிரட்டி ஜனநாயக ரீதியாகவும், வலுவாக போராடுவோம் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்