திருச்சி முசிறி தண்டல பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி வயது 37 லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுதா வயது 35 இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவர் பெரியசாமியின் மனைவி சுதாவை கடத்தி சென்றதாக கூறி முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அலுவலகம் முன்பு திடீரென குடும்பத்தோடு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிப்பதற்காக நின்றுகொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் அருணாச்சலம் ஆகியோர் உடனடியாக மண்ணெண்ணெய் கேனை தள்ளிவிட்டு அந்த குடும்பத்தை காப்பாற்றினர்.

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கூறுகையில் இதுபோன்ற தவறான தற்கொலை முடிவு எடுப்பவர்கள் மீது அரசும் காவல் துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்