காக்ரோச் கிரியேஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் மிரட்டலான படைப்பாக ‘சரக்குவார்பட்டி’ என்ற புதிய குறும்படம் யுடியூப்பில் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருச்சி, தலைமை தபால்நிலையம் எதிரே உள்ள ராணா மண்டபத்தில் இயக்குனர் ஆர்.பாஸ்கர் இயக்கத்தில் உருவான ‘சரக்குவார்பட்டி’ திரையிடப்பட்டது.

இந்த திரைப்படத்தில் இயக்குனர் பாஸ்கர், சமூக அக்கறை கொண்டு மது ஒழிப்புக்கான புது யுக்தியை கதைக்களமாக்கி உள்ளார்.இவரது 4வது படைப்பான இந்த படத்தில், பாட்டிலை திறந்து மது வாசம் காற்றில் பரவினால் பேய் வரும். மது குடிக்க தடை செய்யப்பட்ட கிராமமான சரக்குவார்பட்டிக்கு வரும் வாலிபர்கள், மது குடிக்க தயாராகின்றனர். அப்போது, அரங்கேறும் சம்பவங்கள் தான் படம் கதைக்களம். மது குடிக்கும் வாலிபர்களின் அலப்பறை, ஒருவரையும் விட்டு வைக்காமல் புரட்டி எடுக்கும் பேய்.இருட்டையும் மிரட்டும் இசை எல்லாவற்றையும் சேர்த்து, ஒரு கிராமம் மட்டுமல்ல நாடே, ‘இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?’ என்று கேட்கும் வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

குறும்பட வெளியீட்டு விழாவிற்கு, தண்ணீர் அமைப்பை சேர்ந்த ஆர்.கே. ராஜாவும், சமூக செயற்பாட்டாளர் பால் குணா லோகநாதன், நாகநாதர் டீக்கடை உரிமையாளர் சிவா, வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி, மக்கள் சக்தி இயக்கத்தை சேர்ந்த நீலமேகம் மற்றும் அபி அழகி மூவி மேக்கரஸ் உரிமையாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டவர்கள் தலைமை ஏற்று ‘சரக்குவார்பட்டி’ குறும்படத்தை வெளியீட்டனர். இந்நிகழ்ச்சியில், நடித்த கலைஞர்கள் உதவி இயக்குனர்கள் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஓவியர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *