திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் வழக்கறிஞர். கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் .அழகிரி அறிவிப்புக்கு இணங்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற நகராட்சி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நாளை 1. 12 .2021 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான திருச்சி அருணாசலம் மன்றத்தில் விருப்ப மனுக்கள் மாநில பார்வையாளர்கள் மாநில பொதுச் செயலாளர் பெனட்அந்தோணி ராஜ், மாநிலச் செயலாளர் சாந்தகுமார் மற்றும் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ள உள்ளனர். நாளை மட்டுமே விருப்ப மனுக்கள் பெறப்படும் பொது வார்டுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நன்கொடை கட்டணமாக ரூபாய் 1000 பெண்கள் மற்றும் பட்டியலின வேட்பாளர்களுக்கு ரூபாய் 500 செலுத்த வேண்டும் .இந்த மனுக்கள் உடனடியாக நாளை மாலை 6 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் அனுப்பி வைக்கப்படும் .ஆகவே மணப்பாறை நகராட்சி துவாக்குடி நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், சிறுகமணி, கூத்தைப்பார், பொன்னம்பட்டி ஆகிய 3 பேரூராட்சி களுக்கும் மக்கள் மனுக்கள் திருச்சி மாவட்ட தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெற்றுக் கொள்ளப்படும் .ஆகவே நிர்வாகிகள் நாளை நேரில் வந்து மனுக்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .என திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் வழக்கறிஞர். கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.