காஞ்சிபுரம் தொண்டை மண்டல சைவ மடத்தின் 234 -வது ஆதீனத்தை தேர்வு செய்யும் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் தொண்டை மண்டல சைவ முதலியார்கள் மற்றும் மடத்தின் சீடர்கள் கலந்து கொண்டு ஆதீனத்தை தேர்வு செய்தனர். அதன்படி மதுரை வாடிப்பட்டி சோழவந்தான் முதலியார் கோட்டை மேல தெருவை சேர்ந்த ச. நாகராஜன் 234 -வது ஆதீனமாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் உலர் தாவர காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது கடந்த 5 வருடங்களாக குட்லாடம்பட்டி ஸ்ரீ ரமணாலயம் ஆசிரமத்தில் சுவாமிஜி சாஸ்வானந்த மகாராஜுக்கு சேவை புரிந்து வருகிறார்.

 இந்த ஆதீன தேர்வு கூட்டத்தில் தொண்டை மண்டல ஆதின ஆலோசனை குழு தலைவர் பி.டி.ஆர்.கே. விஜயராஜன், முதலியார் சங்கங்களின் பிரதிநிதிகள் இசக்கி, சுகுமார், தியாகராஜன், சிவசுப்பிரமணியம், முத்துகிருஷ்ணன், உறுப்பினர் எஸ். குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *