ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து 2 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 70 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் தலை மறைவாகிவிட்டார். இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள மக்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து திடீர் திடீரென 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 70 பேர் பலியாகியுள்ளதாகவும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தன தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த அமைப்புக்கு உலக நாடுகள் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் காபூல் குண்டுவெடிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம் என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அப்பாவி மக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் பலியானதற்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published.