பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன் பழனியாண்டி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் முத்துச்செல்வம், காஜா மலை விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய நாடார் பேரவை மாநில தலைவர் ஜே டி ஆர் சுரேஷ் ஏற்பாட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேக் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *