திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.

தனியார் மருத்துவமனை மூலம் நடந்த நீரழிவு சிறப்பு பரிசோதனை முகாமை காவல் துறை துணை தலைவர் சரவண சுந்தர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில் காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர். இந்த மருத்துவ முகாமில் காவல்துறையில் பணிபுரியும் அலுவலர்கள்

ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு உயரம், எடை மற்றும் பருமனால் வரும் நோய்கள் குறித்தும் மேலும் காது பரிசோதனை,

ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண்களின் விழித்திரை பரிசோதனை,கால் ரத்த ஓட்டம் மற்றும் உணர்ச்சி பரிசோதனை, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை குறித்த ஆலோசனைகள் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்ட காவலர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்