திருச்சி காந்தி மார்க்கெட் ஜின்னா தெருவை சேர்ந்த சாதிக் பாதுஷா என்பவரின் மகன் அபு வயது 16 தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இவனும் இவரது மூன்று நண்பர்களும் குடமுருட்டி காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் சிறுவன் அபு மட்டும் ஆழத்தில் குளிக்க சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளார். இதனை கண்ட நண்பர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்களிடம் உதவி கேட்டு கதறி அழுதனர்.

ஆற்றில் செல்லப்பட்ட சிறுவன் கிடைக்காததால் உடனடியாக நண்பர்கள் மூவரும் அபு வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை முதல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்