அனைத்து BSNL அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்

28 முதல் 30 டிசம்பர் 2021 வரை தொடர் உண்ணா விரத போராட்டம் கண்டோன்மெண்ட் அருகே இன்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தகுதியுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் BEEPPARR-2017 ன் படி 01.07.2018 முதல் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

மறுசீரமைப்பு உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும். SDE/AO க்கு 5 ஆண்டுகள் மற்றும் AGM/CAO பதவி உயர்வுகளுக்கு 8 ஆண்டுகள் என ஸ்டேக்னேஷன் அளவுகோலை உருவாக்க வேண்டும். JTO மற்றும் SDE சமமான கிரேடுகளுக்கு E2 & E3 ஸ்டாண்டர்ட் PAY ஸ்கேல் செயல்படுத்தவேண்டும். MT மற்றும் DGM R.R களை ஸ்கிராப் செய்ய வேண்டும். ஃபாஸ்ட் டிராக் ப்ரோமோஷன் முறையை செயல்படுத்தவேண்டும். CAO பதவி உயர்வுக்கான தகுதிச் சேவையில் தளர்வு அளிக்க வேண்டும். தற்காலிக பதவி உயர்வுகளை தவிர்த்து நிரந்தர பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.

 BSNL நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், நிர்வாக சீர் கேட்டினை சரி செய்யவும், முறையாக நிறுவனத்தை நடத்திடவும் கோரி தொடர் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பட்டதாரி பொறியாளர்கள் மாநில தலைவர் செந்தில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *