திருச்சி மாநகராட்சி இருபதாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு அப்பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில் 20 ஆவது வார்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற குறைகளை நிவர்த்தி செய்ய புதிய திட்டங்களை கொண்டு வர நல்லதொரு வாய்ப்பை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் எனக்கு தந்துள்ளீர்கள்.

நான் வெற்றி பெற்றதும் இந்த வார்டு மக்களின் முன்னேற்றத்திற்கு என்னை முழுவதுமாக அர்ப்பணித்து செயலாற்றுவேன்.

இப்பகுதியிலுள்ள அடிப்படைப் பிரச்சனைகளை கேட்டறிந்து அதை உடனுக்குடன் சரிசெய்ய உங்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்.

எனவே 20வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிற்கும் வெல்லமண்டி ஜவர்லால் நேருவாகிய என்னை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.