கேரளா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரளா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்றனர்.திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு அரங்கில் நடைற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், பினராயி விஜயனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள என்னுடைய சகோதரர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்கள். உங்களின் உறுதியும் விடாமுயற்சியும் சமூக சமத்துவம், அமைதி மற்றும் மக்களுக்கு செழிப்புக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்