கொரோனா நோய் தோற்றல் உயிரிழந்த தாயின் சடலத்தை மகனே தனது தோளில் சுமந்தபடி இடுகாடு வரை தூக்கி சென்று தகனம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலம் பாங்வார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர் சிங் என்பவரின் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தினால் அவருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டிலேயே வைத்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். பின்னர் அவர் கடந்த வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். இறந்த தாயின் உடலை தகனம் செய்வதற்கு அதிகாரிகளிடம் உதவி கேட்டபோது யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் கொடுத்து உதவி கேட்ட போதும் அவர் இடுகாட்டிற்கு கொண்டு செல்ல வாகனத்தை கூட ஏற்பாடு செய்யவில்லை. கிராமத்திலிருக்கும் மக்கள் யாரும் உதவிக்கு முன்வராத காரணத்தினால் பணியாளர் ஒருவரிடம் பிபிஇ கிட்டை வாங்கி அணிந்து கொண்டு தனது தாயின் சடலத்தை தோளில் சுமந்தபடி இடுகாடு வரை தூக்கி சென்றுள்ளார். இந்த சம்பவம் பார்ப்போரை மிகவும் கண்கலங்க செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *