கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் வயது(45). மருந்து கடை நடத்திவருகிறார். இவரது மனைவி ஜெயந்தி வயது (40). இவர்களுடைய மகன் விபின் வயது (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் சாமுவேல் வயது (8) 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் தன்ராஜ் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்ந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 15-ந் தேதி இறந்தார். அவரை உடனிருந்து கவனித்து வந்த அவருடைய மனைவி ஜெயந்திக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், கணவர் இறந்த 2 நாட்கள் கழித்து 17-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜெயந்தியின் தாய் பத்மா துரைக்கு வயது (60) தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவரும் கடந்த வாரம் கொரோனாவுக்கு பலியானார். ஒரே குடும்பத்தில் பெற்றோர் மற்றும் பாட்டி என 3 பேர் அடுத்தடுத்து இறந்ததால் அந்த சோகத்தை தாங்க முடியாமல் விபின், சாமுவேல் ஆகியோர் கண்ணீருடன் சோகத்தில் தவித்து வருகின்றனர்.மேலும் பெற்றோரை இழந்த விபின், சாமுவேல் ஆகியோர் கூறுகையில் கொரோனா சிகிச்சைக்கு சென்ற அப்பா, அம்மா, பாட்டி திரும்பி வர வில்லை. அவர்களை இழந்து நிற்கும் எங்களின் கல்விக்கு யாராவது உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *